ஞாயிறு, 3 ஜூலை, 2016

புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள்
மதம்,சமூகம் என பல விஷயங்கள் சார்ந்து நாம் பல அறங்களையும் அதன் வழியே மனிதர்கள் குறித்த பிம்பங்களைய்ம் உருவாக்கிக் கொள்கிறோம்.அந்த பிம்பக் கண்ணாடி வழியே நாம் மனிதர்களைப் பார்க்கிறோம்.ஆனால் எந்த பிம்பத்தைத் தாண்டியும் மனிதன் இருக்கிறான் என்பதை மறந்து விடுகிறோம்.எனவே அவன் மீது அன்பு செலுத்துவதை மறுத்துவருகிறோம்.அப்படி புறக்கணிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது ”அவள் அப்படித்தான்” திரைப்படம்.நாயகியின் பால்ய காலம் மகிழ்ச்சியானதாகவோ அன்பு நிறைந்ததாகவோ இல்லை.அவள் தன்னியல்பாகவும் அனுபவம் தந்த கசப்பு மூலமாகவும் போலியான மனிதர்களைக் காண்கையில் வெடிக்கிறாள்.இது அவளைக் குறித்த தவறான ஒரு பிம்பத்தை சக மனிதர்களிடயே உருவாக்குகிறது.அப்போது பெண்கள் குறித்து ஆவணப்படம் எடுக்கும் ஓர் இளைஞனைச் சந்திக்கிறாள்.அவன் அவளின் அன்பிலா வாழ்க்கையைப் புரிந்துகொள்கிறான்.அவளை நேசிக்கத் தொடங்குகிறான்.அவளைத் திருமணம் செய்ய நினைக்கிறான்.ஆனால் அவளின் சீற்றம் அவனை பயம் கொள்ளச் செய்கிறது.அவனால் அவளின் செயல்களைச் சரியாகப் புரிந்துகொள்ள இயலவில்லை.அவளைத் திருமணம் செய்துகொண்டு தன் வாழ்க்கை பிரச்சினைக்குள்ளாகுமோ என அஞ்சுகிறான்.கடைசியில் அவனும் அவளைக் கைவிட்டு பெற்றோர் பர்த்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான்.தன் மீது அன்பு செலுத்தும் ஒர் மனிதனுக்காக அவள் காத்திருப்பதுடன் திரப்படம் முடிகிறது.மனிதனின் அகச் சிக்கல்களைச் சொல்லும் திரைப்படங்கள் தமிழில் மிகக் குறைவு.1978ல் வெளியான இப்படம் தமிழக மக்களின் வரவேற்பின்றி தோல்வியடைந்தது.அதன் பாடல்கள் புகழ்பெற்று இருப்பினும்,பாடல்கள் போன்ற வணிக சமரசங்கள் இருப்பினும் தோல்வியடைந்தது.இதைத் தொடர்ந்து மாற்று சினிமா வளரும் சாத்தியத்தை மக்களின் வரவேற்பின்மை தோற்கடித்தது.இருப்பினும் இன்றும் தமிழ்ச் சினிமாவின் ஒரு மைல் கல்லாக,சமூகத்தால் புறக்கணி
க்கப்பட்ட எண்ணற்ற மக்களின் பிரதிதிநிதியாக இத்திரைப்படம் இன்றும் தமிழர்களால் தொடர்ந்து பார்க்கப்படுகிறது.you tubeஇ இத் திரைப்படம் கிடைக்கிறது.அதன் சுட்டி இங்கே தரப்பட்டுள்ளது.


https://www.youtube.com/watch?v=l2XQR3bBZWM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக