ஞாயிறு, 3 ஜூலை, 2016

சச்சின் டெண்டுல்கர் அறிமுகமான காலகட்டத்தில் அதிரடியாக விளையாடினார்.நாட்கள் செல்லச் செல்ல தனது மட்டையடிக்கும் தன்மையை தற்காப்பு ஆட்டமாக மாற்றிக் கொண்டார்.நீண்ட இன்னிங்ஸ்களை தொடர்ச்சியாக(consistent) ஆடுவதற்கு அதிரடியான பாணி பயன்படாது.சில விதிவிலக்குகள் தவிர.(விவியன் ரிச்சட்ஸ்,பிரெயின் லாரா,சேவாக்)தோனியும் அறிமுகமான காலகட்டத்தில் அதிரடியாக ஆடினார்.அதன் பின் தனது ஆட்டப் பாணியைமெல்ல மாற்றிக் கொண்டார்.தற்போது ஒரு கடின இலக்கைச் சென்றடைய வேண்டுமென்றால் கடைசி சில ஓவர்களைத் தவிர்த்து அவர் ஒன்று மட்டும் இரண்டு மறும் மோசமான பந்துகளில் நான்கு ஓட்டங்களும் எடுப்பார்.கடைசி சில ஓவர்களே எஞ்சி இருக்கையில் தனது அதிரடி பாணியைக் கடைப்பிடித்து வெற்றியைத் தேடித் தருவதில் பதற்றமின்றி ஆடும் அவரது மனநிலையும் ஒரு காரணம்.அதனாலேயே அவர் உலகின் great finisherகளில் முதலாவதாக இருக்கிறார்.கோலி ஆறிமுகமான புதிதில் கால் திசையில்(Leg side) மட்டுமே பலம் வாய்ந்தவராக இருந்தார். பின்னர் ஆப் திசையிலும் ஆட முயற்சி செய்தார்.அதிலும் குறிப்பாக அவரது கவர் டிரைவ், வலைப்பயிற்சியின் போது அவர் எடுத்துக்கொண்ட உழைப்பைக் காட்டுகிறது.தற்போது அவர் பந்தின் தரத்திற்கேற்ப மைதானத்தின் அனைத்துத் திசைகளிலும் பந்தை விரட்டுகிறார்.ஓரிரு ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியின் டெஸ்ட் மாட்ச்களில் மிச்சல் ஜான்ஸனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் எப்போதும் எதிரணி பேட்ஸ்மேன்களை உனர்ச்சிவசப்படச் செய்யும் வார்த்தைகளைப் பிரயோகிப்பர்.அது எதிரணி மட்டையாளர்களின் மனதின் சமநிலையைக் குலைத்து அவரை உணர்ச்சிவசப்படச் செய்து விக்கெட்டை வீழ்த்தும் உத்தி.ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லிக்கும் பாகிஸ்தானின் மியாந்ததுக்கும் நடந்த உணர்ச்சிமோதல் மிகப் பிரபலம்.சச்சின் இவ்வகையான வாக்குவாதங்களை ஒரு புன்னகையுடன் ஒதுக்கிவிட்டு ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தியதால் அவர் ஆஸ்திரேலிய பவுலர்கலை துவம்சம் செய்ய முடிந்தது.கோலி மிச்சல் ஜான்ஸனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அடுத்த சில பந்துகளில் அவரது மட்டை வீச்சு சிறப்பாக இல்லை.அவர் எப்போதும் ஆக்ரோஷமும் கொந்தளிப்புமான மனநிலை கொண்டவர்.அதுவே அவரது பலம் மற்றும் பலவீனம்.27 மார்ச் அன்று நடந்த ஆஸ்திரேலியாவுடனான முக்கியமான ஆட்டத்தில் அவர் ஆக்ரோஷத்தோடும் அதே சமயம் நிதானத்தோடும் ஆடியது அவரின் ஷாட் செலக்‌ஷனில் தெரிந்தது.அவர் கெயிலைப் போலவோ தோனியைப் போலவோ அபாரமான உடல் வலு கொண்டவரல்ல.இதை பேட்டிகளில் அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.t20 ஆட்டங்களில் எல்லைக் கோட்டை நோக்கி பந்தை விரட்டி ஆறு ஓட்டங்கள் எடுக்கும் தோனி,கெயில்,யுவராஜ்,கோரி ஆண்டர்சன்,டிவில்லர்ஸ் போன்றோரே பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்து வெற்றியத் தேடித்தர முடியும் என்ற கூற்றைப் பொய்யாக்கி ஒன்று, இரண்டு மறும் நான்கு ஓட்டங்கள் மூலமும் வெற்றியைத் தேடித்தர இயலும் என்பதை கோலி தனது ஆட்டத்தின் முலம் நிரூபித்துள்ளார்.பல முறை தனது அணிக்கு வெற்றியைத் தேடித் தன்ந்தாலும் கோலியின் இந்த ஆட்ட்டமே அவரின் தலை சிறந்த ஆட்டமென்பேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக