ஊமைச்செந்நாய்
குற்றம் செய்பவர்க்கு கொடுக்கப்படும் தண்டனையானது உடல் ரீதியுல் ஒருவன் ஒடுக்கப்படும்போது அவன் மனம் ஒடுக்கப்படுகிறது.அது அவன் மனதில் ஒரு அனுபவமாகப் பதிகிறது.அக்குற்றத்திற்கான தண்டனையின் பயம் மீண்டும் குற்றம் புரிவதிலிருந்து அவனைத் தடுக்கிறது.கருட புராணமும் மனு தர்மமும் இன்ன பிற நூல்களும் கூறும் தண்டனை முறைகள் இதன் அடிப்படையிலானவை.இன்றும் கூட வளைகுடா நாடுகளிலும் பல மூன்றாம் உலக நாடுகளிலும் சில வளர்ந்த நாடுகளிலும் கூட தண்டனை முறைகள் கடுமையானவை.நவீன மனிதனின் பார்வையில் இத்தகைய தண்டனை முறைகள் குற்றம் குறித்த பயத்தை விதைக்கின்றதே ஒழிய அது குறித்த எண்ணத்தையோ அதன் சூழலையோ கணக்கில் கொள்வதில்லை.அதன் காரணமாக மன நோய் கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்குகிறோம்.ஜெயமோகனின் ”ஊமைச்செந்நாய்” இது குறித்து ஒரு விசாலமான பார்வையை முன்வைக்கிறது.ஒரு வெள்ளை ஆங்கிலேயனிடம் அடிமை போல் வேலை செய்யும் ஒரு இந்தியச் கீழ்குடி இளைஞன் தனது எஜமானுடன் காட்டிற்குச் செல்லுகையில் பாம்பினால் கடிபட்டு இருக்கும் எஜமானைக் காப்பாற்றுவதன் மூலம் அடிமையும் எஜமானும் மனதளவில் நெருங்குகிறார்கள்.அவனை நண்பனாக பாவித்து எஜமானன் தனது கீழான வாழ்க்கை குறித்து மனம் திறக்கிறான்.பாறை வழுக்கி பாதாளத்தில் விழும் நேரத்தில் கை கொடுத்துக் காப்பாற்ற நினைக்கும் எஜமானனின் உதவியைப் புறக்கணித்து சாவத் தழுவுவதன் மூலம் தனது எஜமானின் குற்றங்களுக்கெல்லாம் தண்டனை தருகிறான் அவ்விளைஞன்..அதன் பின் எந்த ஒரு வேலைக்காரனையும் கேவலாமக் அந்த எஜமானால் நடத்த இயல்லதபடி அவனது மனசாட்சியை விழிப்படையச் செய்து விடுகிறான்.ஜெயமோகனின் நடை காட்டாறு போல பாய்ந்து பிரவாகிக்கிறது.அவரது எழுத்தின் பலம்,கதையை காட்சியாக நம்முள் விரியச் செய்வதே..காட்சியாக நம்முள் விரியும் எதுவும் நம்மை அதிகமாக பாதிக்கும்.இரத்தம் என்று எழுதுவதற்கும் இரத்தத் காட்டும் ஒரு புகைப்படம் நம் மனதில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.அவரது முல்லை நிலம் குறித்த அறிவு காட்டினுள் கதை நிகழும் நேரத்தில் தெரிகிறது.வாழ்க்கையில் ஒரு முறையாவது அடுத்தவர்களை கீழாக நடத்தும் மனிதனின் மனசாட்சியைத் தூங்கவிடாமல் செய்யும் ஒரு படைப்பு தான் ஊமச் செந்நாய்.கதையை வலைதளத்தில் படிக்க சுட்டி கீழே.
http://www.jeyamohan.in/767#.V3jMohIno7Q
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக