இந்தியாவுடன் பங்க்ளாதேஷ் மோதியமார்ச் 2016 t20 ஆட்டத்தில் கடைசிப் பந்தில் தோனி ரன்
அவுட் செய்ததில் முகநூலில் அவரது விக்கெட் காப்பு திறன் குறித்து
சிலாகித்து அதிகமான பதிவுகளைப் படிக்க நேர்ந்தது.இந்திய அணியில் ராகுல்
திராவிட் விக்கெட் காப்பாளராக வேண்டா வெறுப்பாக இருந்த நேரத்தில் அவருக்கு
மாற்றாக பல விக்கெட் காப்பாளர்களை இந்திய அணி பயன்படுத்தியது.ஆனால் நல்ல
விக்கெட் காப்பாளர் நல்ல மட்டையாளராக இல்லை.நல்ல மட்டையாளர் சுமாரான
விக்கெட் காப்பாளராய் இருந்தார்.அந்நேரத்தில் நல்ல மட்டையாளராகவும் விக்கெட்
காப்பாளராகவும் அணிக்குள் வந்த தோனி தனது இடத்தைத் தக்க வைத்துக்
கொண்டார்.இந்திய அணியுல் கடந்த காலங்களில் விக்கெட் கீப்பராக இருந்த
கிர்மானி,கிரண்மோருடன் ஒப்புநோக்கையில் தோனி ஒரு சிறந்த விக்கெட் காப்பாளர்
இல்லை.அவர் விக்கெட் காப்பில் ஒரு தலை சிறந்த காட்ச் அல்லது ஸ்டம்பிங்
என்று ஒன்று கூட இல்லை.அவர் ஒரு நல்ல விக்கெட் காபாளர் மற்றும் அணிக்குப்
பயனுள்ள ஒரு நல்ல மட்டையாளர்.அவரது மட்டையடிக்கும் பாணி கிளாசிக் என்று கூற
இயலாது.அவர் கடைசி ஓவர்களில் பதற்றமின்றி ஓட்டம் குவிக்கும் திறனும் பந்தை
எல்லைக் கோட்டை கடக்க விடும் அவரின் உடல் வலுவும் தான் அவரை நல்ல
மட்டையாளராகக் காட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக