கடந்த வாரத்தில் சென்னை சுங்கத்துறை இணைய தளம் பாகிஸ்தான் தீவிரவாதிகளால்
முடக்கப்பட்டது என்ற செய்தி நாளிதழ்களில் வெளியானது.பல ஆண்டுகளுக்கு முன்பே
சீன அரசு அவர்களின் அரசாங்க கணிப்பொரிகளில் விண்டோஸ்க்கு பதிலாக லினக்ஸ்
இயக்குதளத்தை உபயோகிபதாக முடிவு செய்தது.லினக்ஸில் உள்ள கூடுதல் வசதி
என்னவெனில் உங்களுக்கான பாதுகாப்புச் சுவற்றை (Fire wall)நீங்களே
வடிவமைத்துக் கொள்ளலாம்.இதனால் வேறு நாடுகளிலிருந்தோ அல்லது தனது நாட்டிலோ
அரசு கணிணியை ஊடுருவ இயலாது.அப்போது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்
கூட இனிமேல் நாட்டில் திறந்த மென்பொருளைப் பயன்படுத்த ஊக்குவித்து ஓர்
அறிக்கை வெளிய்ட்டார்.இதனை அடுத்து பில் கேட்ஸ் இந்தியா வந்து அரசியல்
தலைவர்களையும் வர்த்தகர்களையும் சந்தித்தார்.அதன் விளைவாக ஹைதராபாத் நகரில்
மைக்ரொசாப்ட்.தனது அலுவலதத்தைத் தொடங்கியது.உடனே அரசியல்வாதிகள் மற்றும்
அறிவு ஜீவிகள் சிலர் பில் கேட்ஸை இந்தியா வர வைத்தது நமது வளரும் பொருளியல்
என்று மார்தட்டிக் கொண்டனர்.அவர் வந்ததன் காரணம் தனது விண்டோஸ்
இயக்குதளத்தை விட்டுவிட்டு நாம் எங்கு லினக்ஸுக்கு மாறிவிடுவோமோ என்ற பயம்
தானே ஒழிய வேறில்லை.தற்போது நமது அரசு தனது கணிணிகளில் விண்டோஸ்
இயக்குதளத்தையே பயன் படுத்துகிறது.அதன் விளைவே இத்தகைய ஊடிருவல்கள்.நாம்
இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும் இல்லையேல் நம்த் அரசாங்க இரகசியங்கள்
உளவுபார்க்கப் படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக