நீங்கள் சிங்கப்பூர் வரும்போது உங்களைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் அலுவல் காரணமாக சந்திக்க இயலவில்லை.நீங்கள் கூறுவது உண்மைதான்.புத்தங்களை இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் கொண்டுவருவது சவாலான விஷயந்தான்.நான் சென்னையிலிருந்து வரும் வேளையில் 30கிலோ புத்தகங்கள் கொண்டுவந்தேன்.பல புத்தகங்கள் விற்கின்றன சில விற்பதில்லை.குறைந்த அளவு லாபம் மட்டுமே கிடைக்கிறது.நான் சிங்கப்பூரில் புத்தக வியாபாரம் செய்ய முயன்றுள்ளேன்.100 ரூபாய் புத்தகத்தை $5க்கு கொடுத்தேன்.ஆனால் இங்கு கடை அமைத்து வியாபாரம் செய்ய கடை வாடகை மின்சாரம் என நிறைய செலவு செய்ய வேணியுள்ளது.மேலும் இங்கு தமிழ் புத்தகம் வாங்குபவர்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்கள்.சிங்கப்பூரர்கள் நாடுவது பெரும்பாலும் அரசியல் மற்றும் ஆன்மீகப் புத்தகங்கள் மட்டுமே.வாசிப்பவர்கள் குறைவாக இருப்பதாலும் பரவலாக இருப்பதாலும் ஓரிடத்தில் வியாபாரம் செய்தால் அவர்களை அடைவது கடினம்.தேக்காவில் உள்ள கடைகளில் புத்தகங்கள் மட்டும் விற்பதில்லை.அவர்கள் மளிகை,தொலைபேசி அட்டை இவற்றுடன் சேர்த்தே விற்கிறார்கள்.தனியாக விற்க இயலாது.எனக்குத் தெரிந்த சீன நண்பர் ஒருவர் சீனப் புத்தகங்களுக்காக ஒரு கடை ஒன்றை ஆரம்பித்தார்.சில மாதங்களிலேயே அந்தக்கடை வாடகையைக் கூடக் கொடுக்க முடியாமல் மூடி விட்டு தற்போது வேறு வியாபாரம் செய்கிறார்.மலாய்ப் புத்தகங்களின் நிலை தமிழை விட மோசம்.இங்குள்ளவர்கள் பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகங்களையே விரும்புகின்றனர்.அவற்றையும் நூலகத்தில் படித்து விடுகின்றனர்.ஈரண்டுகளுக்கொருமுறை தேசிய நூலகம் பழைய புத்தகங்களை பொதுமக்களிடம் விற்பனை செய்கிறது.தமிழ் புத்தகங்களின் விலை $1 ஆங்கிலம் $2.நான் தேக்காவில் உள்ள கடைகளில் எனது புத்தகங்களை கொடுக்க அவர்களை அணுகும்போது அவர்கள் என்னை திருக்குறளை மனப்பாடம் செய்யச் சொல்லும் வாத்தியாரிடம் காட்டும் விரோதத்தை காட்டுகின்றனர்.(சில கடைக்காரர்களை பார்க்கும் போது சிங்கப்பூரில் பிச்சைக்காரர்கள் இல்லாதது குறித்து சந்தோஷம் வருகிறது.)
பத்ரி ஷேஷாத்ரியின் சிங்கப்பூர் குறித்தான http://thoughtsintamil.blogspot.com/2010/05/6.html#comments என்ற இடுகைக்கு எனது கருத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக